"டெல்லி கணேஷ் உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும்" - ஊர்மக்கள் கோரிக்கை! - DELHI GANESH DEAD
🎬 Watch Now: Feature Video
Published : Nov 11, 2024, 8:08 AM IST
தூத்துக்குடி: பிரபல நடிகர் டெல்லி கணேஷ் நேற்று முன்தினம் (நவ.09) இரவு உயிரிழந்த நிலையில், அவரது உடல் இன்று (நவ.11) காலை 10 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அவரது சொந்த ஊரான வல்லநாடு கிராம மக்கள், டெல்லி கணேஷ் உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடிகர் டெல்லி கணேஷ் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு கிராமத்தைச் சேர்ந்தவர். இங்கு பள்ளிப் படிப்பை முடித்தவர், விமானப்படையில் பணிக்கு தேர்வாகி டெல்லியில் பணி புரிந்துள்ளார். பின்னர், சினிமாவில் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்த புகழ் பெற்றவர். இந்நிலையில், உடல் நலக்குறைவால் அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, வல்லநாடு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி கூறுகையில், "டெல்லி கணேஷ் அண்ணா இழப்பு எங்கள் ஊர், நாடகத்துறை மற்றும் திரைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு. பாமர மக்களுடன் சிரித்த முகத்துடன் பழகுபவர். அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையோடு நடைபெற வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. அவ்வாறு செய்தால் அது நாடகத்துறை மற்றும் எங்கள் கிராமத்திற்கு கிடைத்த வெற்றி" எனத் தெரிவித்தார்.