ETV Bharat / state

அரசு உதவிப்பெறும் பள்ளியில் வேட்டையன், கோட் சினிமா ஒளிபரப்பப்பட்ட விவகாரம்; நெல்லை டிஇஓ கூறுவது என்ன?

திருநெல்வேலியில் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேட்டையன், தி கோட் திரைப்படங்கள் திரையிடப்பட்ட விவகாரம் குறித்து, பள்ளித் தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்துள்ளதாக மாவட்ட கல்வி அலுவலர் கூறியுள்ளார்.

அரசு உதவிப்பெறும் பள்ளி
அரசு உதவிப்பெறும் பள்ளி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2024, 3:56 PM IST

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், அருகே வி.கே.புரத்தில் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை சுமார் 1,700 மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த நவ 9ம் தேதி மதியம் நடிகர் விஜய் நடித்த 'தி கோட்' திரைப்படம் எல்இடி டிவியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

மேலும், 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படமும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. மொத்தம் 600 மாணவர்கள் படம் பார்த்துள்ளனர். இதற்காக விஜய் படத்திற்கு ரூ.25-ம், ரஜினி படத்துக்கு ரூ.10-ம் மாணவிகளிடம் வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பள்ளியில் மாணவிகளுக்கு பாடம் கற்பிப்பதற்கு பதில், சினிமா திரைப்படம் ஒளிபரப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக புகார்களும் எழுந்தன. இதனிடையே பள்ளியில் சினிமா படங்கள் ஒளிபரப்பப்பட்ட தகவல் கசிந்த நிலையில், இந்து முன்னணி நிர்வாகிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், புதிய திரைப்படங்கள் இரண்டும் திரையிடுவதற்கு பள்ளியில் உரிமம் பெற்று உள்ளார்களா? என்று கேள்விகளும் எழும்பின. பள்ளிகளில் சினிமா திரைப்படங்களை திரையிட்டு அதன் மூலம் வசூல் வேட்டையில் பள்ளி நிர்வாகம் இறங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உத்தரவின் பேரில் கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க : தாம்பரம் மாநகராட்சி இன்னும் பெருசாகும்... வண்டலூரை ஒட்டிய கிராமங்களும் சிட்டிக்குள்ள சேர போகுது - அமைச்சர் தகவல்!

இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் கூறுகையில், "மாணவர்களுக்கு மன அளவிலான அழுத்தத்தை குறைப்பதற்காக திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்தார். மேலும், மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட தொகையை உடனடியாக திருப்பி வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளேன் என்றும் கூறினார்.

வேட்டையன் படத்தில் நீட் தேர்வு தொடர்பான காட்சிகள் உள்ளதால் விழிப்புணர்வுக்காகவும் படம் ஒளிபரப்பியதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். இருப்பினும், பாடம் கற்பிக்கும் பள்ளியில் திரைப்படம் ஒளிபரப்பியது தவறு என்பதால் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.