டிவியுடன் பிரச்சாரம் செய்த சுயேச்சை வேட்பாளர்: நெல்லையில் நடந்த சுவாரசியம்.. - Lok Sabha Election 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 5:39 PM IST

திருநெல்வேலி: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்.19) நடைபெறவுள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப் படுத்தியுள்ளனர். இதற்கிடையில், பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு இணையாக, சுயேச்சை வேட்பாளர்களும் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர் அதிசய பாண்டியன் என்பவர், தலையில் தொலைக்காட்சி பெட்டியுடன் பனியன் அணிந்து கொண்டு கழுத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களையும், கனிம வளம் கடத்துகின்ற புகைப்படங்களையும் அணிந்து பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில், அனைத்து கடைகளுக்கும் சென்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அவர் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது, "கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அன்று பெய்த கனமழையால் நெல்லை மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியில்லாமல் மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலையில் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளில் வாழ்வதற்கு மேம்படுத்திட போதுமான நிவாரணங்களையும் இதுவரை அறிவிக்கவில்லை.

மேலும், நெல்லை மாவட்டத்தில் இயற்கை நமக்கு அளித்த கனிமவளங்களைக் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் கடத்துகின்ற கடத்தல் காரர்கள் குறித்து எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை" என்று கூறி வாக்காளர்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.