பாஜகவில் இணைகிறேனா? - அதிமுக ஆதரவாளர் மணிகண்டனின் விளக்கம்! - aidmk supporter advocate Manikandan

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 1:45 PM IST

சேலம்: நிலவாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த அதிமுகவில் உறுப்பினராகவும், வழக்கறிஞராகவும் இருக்கக் கூடியவர் மணிகண்டன். இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிமுகவிற்கு ஆதரவாக விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடியவர். இந்த நிலையில், இவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் பரவிவந்தது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், "கடந்த 2011ஆம் ஆண்டு நான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் நான் அதிமுகவில் இணைந்து கொண்டேன். அதற்கு முன்பு நான் பாஜகவில் சில ஆண்டுகள் பொறுப்புகளில் இருந்தேன். இந்த நிலையில், ஒரு பிரபல நாளிதழ் நான் பாஜகவில் இணையப்போவதாக என்னுடைய பெயரை குறிப்பிடாமல் தெரிவித்துள்ளனர்.

இது முற்றிலும் பொய்யான தகவல், அதிமுக மீது எனக்கு இருக்கும் ஈர்ப்பைவிட எடப்பாடி பழனிசாமி மீது ஒருபடி அதிகமான ஈர்ப்புள்ளது. அண்ணாமலை போன்ற ஒரு எல் போர்ட் அரசியல் வாதியை நம்பி நான் அதிமுகவைவிட்டு பாஜவில் இணைவேன் என்பது கற்பனையில் உச்சபட்சம். அண்ணாமலைக்கு இருக்கும் வாக்கு சதவீதம் என்ன என்பது வரும் நாடாளுமன்ற தேர்தலில் தெரியவரும்.

இந்த நிலையில், நான் பாஜகவில் இணைய உள்ளதாக தமிழ் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி மன உலைச்சலை அளிக்கிறது. மோடியின் தலைமையில் கட்சியில் இணைய எனக்கு வாய்ப்பு விடுத்த போதும் அதன் நான் நிராகரித்து விட்டேன். எடப்பாடி பழனிசாமி 2026ல் தமிழகத்தில் நல்லாட்சி அமைப்பதறு கட்டியம் கூறக்கூடிய தேர்தல் தான் வரும் நாடாளுமன்ற தேர்தல்" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.