LIVE: சேலம் தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்! - EPS ELECTION CAMPAIGN LIVE - EPS ELECTION CAMPAIGN LIVE
🎬 Watch Now: Feature Video
Published : Apr 12, 2024, 6:01 PM IST
|Updated : Apr 12, 2024, 9:20 PM IST
சேலம்: அதிமுக சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 12) நாமக்கல் மற்றும் சேலத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன் நேரலை காட்சிகளை காணலாம்...தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் மிகவும் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகிறது. இந்நிலையில், நாமக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்.தமிழ்மணி-யை ஆதரித்து திருச்செங்கோடில் அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து, இரவு 7 மணியளவில் சேலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் விக்னேஷ்-யை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். முன்னதாக, நேற்று ஆரணி மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
Last Updated : Apr 12, 2024, 9:20 PM IST