திருச்சியில் வாலிபால் விளையாடி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : Apr 3, 2024, 11:02 PM IST
திருச்சி: திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ, அதிமுக சார்பில் கருப்பையா, பாஜக கூட்டணியில் அமமுக சார்பில் செந்தில் நாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் டி. ராஜேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் புதுக்கோட்டை , கந்தர்வக்கோட்டை ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கருப்பையா தொகுதி முழுவதும் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் வேட்பாளர் கருப்பையா மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று(ஏப்.3) அதிகாலை திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
தொடர்ந்து உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்களிடம் நலம் விசாரித்து வாக்கு சேகரித்தனர். அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வேட்பாளர் கருப்பையா ஆகியோர் அங்கு வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தவர்களோடு வாலிபால் விளையாடி வாக்கு சேகரித்தனர்.
அதைத்தொடர்ந்து காஜாமலை அண்ணா விளையாட்டு அரங்கம் சென்று அங்கு நடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.