ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்! - YOGI BABU
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/23-11-2024/640-480-22966662-thumbnail-16x9-yogi.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Nov 23, 2024, 11:04 PM IST
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 108 திவ்ய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது. இங்கு, யோக நரசிம்மர் தியான நிலையில் இருப்பது தனி சிறப்பாகும். இதனால், தமிழகம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வர்.
இந்நிலையில் இன்று (நவ 23) திரைப்பட நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்வதாக இங்கு வருகை தந்தார். ரோப் கார் மூலம் பயணித்து, மலைக்கு மேல் வீற்றிருக்கும் நரசிம்மரை தரிசனம் செய்தார். திருக்கோயில் சார்பில், நடிகர் யோகி பாபுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் பட்டு வஸ்திரம், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தீபராதனைக்குப் பின், யோகி பாபுவுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சாமி தரிசனத்துக்குப் பின், கோயிலில் பணியாற்றும் பணியாளர்கள், பக்தர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் நடிகர் யோகி பாபுவுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். முன்னதாக, இந்த கோயிலுக்கு நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.