கான்ஸ்டபிள் ஆகிறார் யோகி பாபு.. திருவண்ணாமலையில் சாமி தரிசனம்! - Actor Yogi Babu - ACTOR YOGI BABU
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-07-2024/640-480-21890137-thumbnail-16x9-yog.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Jul 7, 2024, 3:58 PM IST
திருவண்ணாமலை: பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் யோகி பாபு புதிதாக 'கான்ஸ்டபிள் நந்தன்' என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தின் தொடக்க விழா பூஜை, பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்றது.
இதில் நடிகர்கள் யோகி பாபு மற்றும் ரவி மரியா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பாக மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. கோயிலுக்கு வந்த யோகிபாபு மற்றும் ரவி மரியாவுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நகைச்சுவை நடிகராக அறிமுகமான யோகி பாபு குணச்சித்திர வேடங்கள் மட்டுமின்றி, கதையின் நாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்திற்கு 'கான்ஸ்டபிள் நந்தன்' என பெயரிடப்பட்டுள்ளது.
இதை அறிமுக இயக்குநர் பூபால நடேசன் எழுதி இயக்குகிறார். "காவல்துறையில் அதிக கருணையுடன் ஒருவர் இருந்தால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் கதை" என இயக்குநர் பூபால நடேசன் கூறியுள்ளார். மேலும், இதில் கருணையின் உச்சமான கான்ஸ்டபிள் கேரக்டரில் யோகிபாபு நடிக்கிறார். அதேநேரம், மிருகத்தனத்தின் உச்சமாக ரவிமரியா நடிக்கிறார் எனவும் இயக்குநர் தெரிவித்தார்.