தஞ்சையில் தூய்மைப் பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து! - BIRYANI FEAST TO Sanitation WORKERS - BIRYANI FEAST TO SANITATION WORKERS
🎬 Watch Now: Feature Video


Published : Apr 28, 2024, 7:38 PM IST
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலின் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதனையடுத்து, தஞ்சை மாநகராட்சி சார்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைத்து வீதிகளையும் தூய்மைப்படுத்தினர்.
மேலும், தேரோட்டம் முடிவடைந்த பின்பு, அன்றே நான்கு ராஜ வீதிகளிலும் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து தூய்மைப் பணியை மேற்கொண்டனர். ஆங்காங்கே பக்தர்கள் வீசிய குடிநீர் பாட்டில், நெகிழிப் பொருட்கள் மற்றும் அன்னதானம் நடைபெற்ற இடங்களில் இருந்த வாழை இலை, பாக்கு மட்டைகள் உள்ளிட்ட உணவுக் கழிவுகளை உடனுக்குடன் அகற்றித் தூய்மைப்படுத்தினர்.
இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களின் இந்த சேவையைப் பாராட்டி அவர்களை கவுரவிக்கும் வகையில், தஞ்சையைச் சேர்ந்த ஜோதி என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், அவர்களுக்கு பிரியாணி விருந்து அளித்தனர். இந்த விருந்து தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும், இந்த விருந்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், மேற்பார்வையாளர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு சிக்கன் பிரியாணி, சிக்கன் கிரேவி, முட்டை, தயிர் சாதம், ஐஸ்க்ரீம் உள்ளிட்டவற்றை உண்டு மகிழ்ந்தனர்.