தண்ணீரின் அவசியம் குறித்து விழிப்புணர்வு: 300 சிறார்கள் யோகாசனம் செய்து சாதனை! - Artha Machendra Asana
🎬 Watch Now: Feature Video
Published : Feb 11, 2024, 9:29 PM IST
தென்காசி: மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு யோகா கூட்டமைப்பு தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாகத் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான நிகழ்ச்சிகளை யோக கூட்டமைப்பு முன்னெடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் உள்ள தனியார் கல்லூரியில், நோபல் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த உலக சாதனை நிகழ்ச்சியின் போது தண்ணீரின் அவசியம் குறித்தும், அதனைச் சிக்கனமாக பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ’அர்த்த மகேந்திர ஆசனம்’ 300-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் ஒருசேர மூன்று நிமிடங்களுக்கு மேல் செய்து சாதனை படைத்தனர்.
இந்த சாதனை நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் உள்ள 10 மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் இந்தியன் யோகாசன ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் தேசிய செயலாளர் அரவிந்த் லட்சுமி, தமிழ்நாடு யோகா கூட்டமைப்பின் அமைப்பாளர் பரணிதான், மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.