சாலை விபத்து சிக்கித்தவித்த 3 பேரை மீட்டு சென்ற 108 ஆம்புலன்ஸ் பழுதான அவலம் - சாலை விபத்து

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2024, 10:13 AM IST

மயிலாடுதுறை: சீர்காழி அருகே பூங்கொடி கிராமத்தில் விபத்தில் படுகாயமடைந்தவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற 108 ஆம்புலன்ஸ் பாதிவழியில் பழுதானதால் ஒரு மணிநேரம் வரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு விபத்துக்குள்ளானவர்கள் காத்திருந்து மற்றொரு ஆம்புலன்ஸில் சென்ற அவலம் ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த குன்னம் கிராமத்தைச் சேர்ந்த சிற்பக்கலை தொழிலாளர்கள் பாரத், குருமூர்த்தி, சரவணன் ஆகிய மூவரும் அருகே உள்ள மாதிரவேலூர் கிராமத்தில் பணிக்காக சென்றுள்ளனர். நேற்று (பிப்.6) மாலை பணி முடிந்து சொந்த ஊர் திரும்பியபோது, பூங்குடி கிராமத்தில் வளைவு ஒன்றில் இருசக்கர வாகனம் கட்டுப்பட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 

இவ்விபத்தில் வாகனத்தை ஒட்டிய பாரத், அவரது பின்னால் அமர்ந்திருந்த குருமூர்த்தி, சரவணன் ஆகிய மூவரும் படுகாயம் அடைந்து சுயநினைவின்றி கீழே விழுந்து உயிருக்குப் போராடியபடி கிடந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் அளித்த தகவலின் படி, சீர்காழி மருத்துவமனையில் இருந்து விரைந்து வந்த 108 வாகனம் காயம் அடைந்தவளை மீட்டு கொண்டு சீர்காழி நோக்கி புறப்பட்டது. 

அப்பொழுது குன்னம் அருகே 108 வாகனத்தின் முன்புற டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்தது. ஓட்டுனரின் சாதுரியத்தால் வாகனம் மிகப்பெரிய விபத்திலிருந்து தப்பித்து சாலையோரம் வாகனம் நின்றது. இதனால் காயம் அடைந்தவர்களை உரிய நேரத்தில் சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாமல் உறவினர்கள் தவித்தனர். இதனையடுத்து மாற்றொரு 108 வாகனம் வரவழைக்கப்பட்டு 1 மணிநேரம் தாமதமாக காயமடைந்த மூவரும் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

108 வாகனங்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் இயங்கும் நிலையில், அவசர காலங்களில் பழுதடைந்த டயர்களை மாற்றுவதற்கான உபகரணங்கள் இல்லாமலும் மாற்று டயர்கள் இல்லாமலும் இயங்கி வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, ஆபத்து காலங்களில் இன்றியமையாத 108 வாகனங்களில் பயணிக்கும் நோயாளிகளின் உயிரை உரிய நேரத்தில் காக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இவ்வாகனங்களை முறையாக பராமரித்து இதுபோன்ற இடையூறுகளில் மாட்டிக்கொள்ளாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.