தமிழ்நாடு

tamil nadu

13ஆம் தேதி புயல் வருமா? புவியரசன் பதில்

By

Published : Oct 11, 2021, 5:01 PM IST

வருகிற (அக்) 13ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்பது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பதிலளித்தார்.

புவியரசன்
புவியரசன்

சென்னை: சென்னை வானிலை மண்டலத்தின் இயக்குனர் புவியரசன் நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரம் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய திருநெல்வேலி பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

நாளை(அக்.11) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும்.

சென்னை வானிலை நிலவரம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

வங்கக் கடல் பகுதிகள் இன்று (அக்.11) அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள்(அக்.12) தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

எனவே மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு போக வேண்டாம். தென்மேற்கு பருவமழை தொடர்ச்சியாக நீடிக்கிறது, தற்போது புதிய கற்றாழுத்த தாழ்வு பகுதி ஒடிசா பகுதிகள் நோக்கி செல்வதால் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து நீடிக்கும்.

தென்மேற்கு பருவமழை முடிவடைந்த பின்பே வடகிழக்கு பருவமழை தொடங்கும், கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும், கடந்தாண்டு இருந்த கால நிலை காரணமாக மேலும் ஒரு மாதம் நீடித்தது. இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

வருகிற 13ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற தற்போதைய நிலவரப்படி வாய்ப்பில்லை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:இந்தியன் பட நடிகர் நெடுமுடி வேணு உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details