ETV Bharat / state

திருப்பத்தூரில் ராட்சச ராட்டினம் கவிழ்ந்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக தப்பிய மக்கள்! - Tirupathur Rattinam issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 10:49 PM IST

Tirupathur Rattinam issue: திருப்பத்தூரில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழாவில் ராட்சத ராட்டினம் திடீரென சாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக ராட்டினத்தில் சிக்கிய மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சாய்ந்த ராட்சத ராட்டினம்
சாய்ந்த ராட்சத ராட்டினம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த பசலிகுட்டை பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி 18ஆம் நாள் ஆடிப்பெருக்கு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழாவில் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடிகள் மற்றும் தேர் இழுத்து தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

இந்த நிலையில், திருவிழாவில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக பல்வேறு வகையான ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பிரபல பாடகர் மூக்குத்தி முருகன் பங்கேற்ற இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. அதனைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு குவிந்திருந்தனர். மேலும், அங்கு இருந்த ராட்டினத்தில் ஏராளமானோர் சுற்றி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், எதிர்பாராத விதமாக ராட்சத ராட்டினம் சாய்ந்துள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் இருந்து மக்கள் அங்கிருந்து வெளியேறினர். உடனடியாக ராட்டின ஆப்ரேட்டர்கள் ராட்டினத்தை நிறுத்திவிட்டு, பொதுமக்கள் உதவியுடன் ராட்டினத்தில் சிக்கிக் கொண்டவர்களை பத்திரமாக மீட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில், அதிர்ஷ்டவசமாக அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “ராட்டினங்கள் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், போதுமான பாதுகாப்பு இல்லாததே விபரீதம் ஏற்பட்டதற்கான காரணம். ராட்சத ராட்டினத்தில் இரண்டு பேர் அமர வேண்டிய பெட்டியில் நான்கு பேர் அமர வைத்ததால் இது போன்ற சம்பவம் நடைபெற்றது” என்று குற்றம் சாட்டினர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: வயநாடுக்குச் சென்ற ராகுல் காந்தி நெல்லை, தூத்துக்குடிக்கு வராதது ஏன்? - சீமான் சரமாரி கேள்வி! - seeman about wayanad landslide

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.