ETV Bharat / international

சோமாலியாவில் பயங்கரவாத அமைப்பின் தற்கொலை தாக்குதல்; 32 பேர் உயிரிழப்பு! - Somali beach attack

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 7:35 PM IST

Terror attack at Somali beach: சோமாலியா நாட்டின் தலைநகர் பகுதியான மொகடிஷுவில் உள்ள தனியார் ஹோட்டலில் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் உட்பட 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 63க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி (Credits - AP Photo)

மொகடிஷு (சோமாலியா): கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்-கொய்தாவின் (Al-Qaida) பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான அல் ஷபாப் (Al-Shabab) போன்ற பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அவற்றை ஒழிப்பதற்கு அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சோமாலியா நாட்டின் தலைநகரான மொகடிஷூவின் பிரபல லிடோ கடற்கரையில் உள்ள தனியார் ஹோட்டலில், வெள்ளிக்கிழமை அன்று குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 63 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தியதாக, அந்நாட்டு அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்த தாக்குதலை அல்-கொய்தாவின் துணை அமைப்பான அல்-ஷபாப் நடத்தியதாக வானொலி மூலம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை நேரில் கண்ட முகமது மோலிம் என்பவர் கூறுகையில், "தாக்குதல் நடத்தியவர்கள் ஹோட்டலுக்குள் புகுந்து, ஹோட்டலில் இருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பின்னர், சிலர் தங்களது உடலில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை தாக்குதல் நடத்தினர். இதில் எனது நண்பர்கள் உட்பட பலர் உயிரிழந்தனர்.

மேலும், தாக்குதலை நேரில் கண்ட அப்திசலாம் ஆதம் என்பவர் கூறுகையில், "தாக்குதலின் போது பலர் அப்பகுதியில் கிடந்ததாகவும், அவர்களுள் சிலரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க உதவிபுரிந்ததாகவும்” தெரிவித்துள்ளார். இதனிடையே, தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஹமாஸ் தளபதி முகமது டெய்ஃப் படுகொலை.. இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.