சென்னை: நண்பன் என்பது வெறும் வார்த்தையல்ல. அது ஒரு ஆழமான உணர்ச்சியை பிரதிபலிக்ககூடிய ஒன்றாகும். நமது ஒவ்வொருவர் வாழ்விலும் நண்பர்கள் மிக முக்கியமானவர்களாக திகழ்வார்கள். ஒரு உண்மையான நண்பன் எப்போதும் நமது இன்பம் - துன்பம் என எல்லாவற்றிலும் நமது கூடவே நிற்பான்.
நாம் விழும் இடங்களில் எல்லாம் நம்மோடு நின்று நம்மை பிடித்துக் கொள்ளும் ஒருவன் என்றால், அது நமது நண்பன் தான். அந்த நண்பனைக் கொண்டாடவும், பாராட்டும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 4ஆம் தேதி சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நண்பர்கள் தின நன்னாளில், தன்னுடைய நண்பர்கள் பற்றி நம்மிடம் பகிர்ந்துள்ளார் கனா பட நடிகர் தர்ஷன்.
”என்கூட இருக்கின்ற நண்பர்கள் எல்லோருமே குடும்பம் மாதிரிதான். அவர்களை நண்பர்கள் மட்டுமே என்று சொல்ல முடியாது. எதாவது பிரச்னை, நாம் ரொம்ப லோவாக உணரும் போது (Feel) அவர்களிடம் பேசினால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். என்னோட வாழ்க்கையில் நிறைய சப்போர்ட்டிவாக உள்ளனர். குடும்பத்தில் எப்படியிருப்போமோ, அப்படித்தான் நண்பர்களும் இருப்பார்கள்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எனக்கு நிறைய புதிய நண்பர்கள் கிடைத்தனர். வெறும் நண்பர்களாக மட்டுமன்றி, குடும்பத்தில் ஒருவராக இருக்கின்றனர். அவர்களின் அம்மா, அப்பா ஆகியோரைப் பார்த்து பேசுவோம். வெளியே போவது என்றால் எல்லோரும் இணைந்து தான் போவோம்.
சிவகார்த்திகேயன் அண்ணா என்னை முதல் முதலில் தட்டிக்கொடுத்து உதவினார். அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர், பிரதர், ஃபேமிலி எல்லாமே என்று சொல்லலாம். கனா படம் பார்த்துவிட்டு நல்லா பண்ணியிருக்க, இன்னும் நல்லா பண்ணு என்று அறிவுரை கொடுத்தார்.
எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் கோல்டன் ஹார்ட் சிவகார்த்திகேயன் அண்ணா. மேலும், இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வரும்” என்று அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: "அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்".. தி கோட் படத்தின் 3வது சிங்கிள் வெளியானது! - THE GOAT 3RD SINGLE OUT