தமிழ்நாடு: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்.27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இம்மாநாடு வெற்றி பெற வேண்டி, திருப்பத்தூர், ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் இன்று தவெக சார்பில் 100 அடி உயர்ம் கொண்ட பிரமாண்ட போஸ்டர் அமைத்து, தவெக மாதனூர் ஒன்றிய தலைவர் நரசிம்மன், செயலாளர் சுரேந்தர், பொருளாளர் விமல் ஆகியோர் தலைமையிலான தொண்டர்கள், அப்பகுதியில் உள்ள ஸ்ரீமஹா காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
தவெக மாநாடு; வெற்றி பெற வேண்டி தொண்டர்கள், ரசிகர்கள் சிறப்பு பூஜை!
தொண்டர்கள் பிராத்தனை, சாய்பாபாவிற்கு அணியப்பட்ட ஏலக்காய் மாலை (Credits - ETV Bharat Tamil Nadu)
Published : Oct 25, 2024, 11:27 AM IST
மேலும், பொதுமக்களுக்கு இனிப்புகளுடன் மாநாட்டிற்கு வரும்படி துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர். அதேபோல், சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த ரசிகர்கள் கொரட்டூரில் உள்ள சாய்பாபா கோயிலில் ஏலக்காய் மாலையை சாய்பாபா சிலைக்கு அணிவித்தனர். சாய் பாபாவிடம் வைத்து ஆசி பெற்ற இந்த மாலையை விஜய்யின் பெற்றோர் சந்திரசேகர், சோபா அம்மா ஆகியோர் தவெக மாநாட்டில் விஜய்க்கு அணிய உள்ளனர்.