சென்னை: திராவிடர் கழகம் சார்பில், "நீட்டை ஓழிப்போம் சமூக நீதி காப்போம்" இருசக்கர வாகன பரப்புரை பயணம் இன்று துவங்கப்பட்டது. கன்னியாகுமரி, இராமநாதபுரம், புதுச்சேரி, தாராபுரம், சென்னை உள்ளிட்ட 5 இடங்களிலிருந்து சேலம் நோக்கி இருசக்கர வாகன பரப்புரை துவக்கப்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணியை திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் தொடங்கி வைத்தார்.
சேலத்தை நோக்கி புறப்பட்ட திராவிடர் கழகத்தின் நீட் ஒழிப்பு இருசக்கர வாகன பேரணி!
Published : Jul 11, 2024, 4:28 PM IST
இந்த இருசக்கர வாகன பேரணியானது வருகிற 15ஆம் தேதி சேலத்தில் நிறைவடைந்து பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை பெரியார் திடலில் 20 இருசக்கர வாகனங்களில் 40 திராவிடர் கழகத்தினர் சேலம் நோக்கி பேரணி பரப்புரையைத் தொடங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழக துணை தலைவர் கலி.பூங்குன்றன், "வழி நெடுகிலும் பொதுமக்களிடம் சென்று நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.