ETV Bharat / state

"சீறும் புயலாக என்னை மாற்றிய அனைவருக்கும் நன்றி" - நடிகை கஸ்தூரி ஆவேசம்! - ACTRESS KASTHURI CASE

தெலுங்கு பெண்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், புழல் சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2024, 6:34 AM IST

சென்னை: பிராமணர் உள்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் பி.சி.ஆர். எனப்படும் வன்கொடுமை தடுப்பு சட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சார்பில், நவம்பர் 3-ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அவருடைய இந்த பேச்சு தெலுங்கு மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக கண்டன குரல்களும் எழுந்தன. இதைத்தொடர்ந்து நடிகை கஸ்தூரி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். அதே வேளையில் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டது.

ஆனால் தலைமறைவாக இருந்த கஸ்தூரியை கைது செய்யும் நடவடிக்கையில் எழும்பூர் போலீசாரும், மதுரை போலீசாரும் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். இதனை தொடர்ந்து, நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் உள்ள சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் தங்கி இருக்கும் தகவல் எழும்பூர் தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது.

அதன்பேரில் அங்கு சென்ற தனிப்படை காவல்துறையினர் கஸ்தூரியை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நடிகை கஸ்தூரி பிணை (ஜாமீன்) கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததை அடுத்து, மனிதாபிமான அடிப்படையில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை பிணை (Condition Bail) வழங்கப்பட்டது.

எனினும், நடிகை கஸ்தூரிக்கு பிணைப் பத்திரம் கொடுப்பதில் தாமதமானதால் அவர் நவ.21 வரை சிறையில் இருந்து வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், இன்று மாலை சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

இதையும் படிங்க: "சென்னை-மயிலாடுதுறை இன்டர்சிட்டி ரயில் சேவை" எம்.பி.சுதா கோரிக்கை!

சிறையில் இருந்து வெளியே வந்த நடிகை கஸ்தூரியை அவரது ஆதரவாளர்கள் பலர் வரவேற்றனர். அப்போது, "மக்கள் தலைவி கஸ்தூரி வாழ்க!" என்று அவர்கள் முழக்கமிட்டு, சால்வை அணிவித்து வரவேற்றனர்.

புழல் சிறையில் இருந்து வெளியே வந்த கஸ்தூரி செய்தியாளர்களிடம் பேசுகையில், "சிறையில் என்னை நன்றாக நடத்திய அனைவருக்கும் நன்றி. எனக்கு ஆதரவளித்த தெலங்கானா, ஆந்திர மக்களுக்கும் நன்றி. என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. சிறு குரலாக இருந்த என்னை, சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி," எனத் தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக தமிழில் பேசிய நடிகை கஸ்தூரி, அடுத்தடுத்து ஆங்கிலம், தெலுங்கு என 3 மொழிகளிலும் தம்மை ஆதரித்தவர்களுக்காக நன்றி தெரிவித்தார். குன்றாக சிறைக்குள் சென்ற தான் தற்போது மலையாக வெளியே வந்துள்ளதாகவும் குன்றாக இருந்த தன்னை மலையாக மாற்றியவர்களுக்கு நன்றி எனவும் கஸ்தூரி தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.