திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி மாதம் பௌர்ணமி முடிந்த நிலையில், நேற்று கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணிகள் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் அஷ்ட லிங்கத்தில் வைக்கப்பட்ட உண்டியல்கள் என அனைத்து உண்டியல்களும் எண்ணப்பட்டன.
திருவண்ணாமலை கோயிலில் ரூ.2 கோடியை கடந்த உண்டியல் காணிக்கை
அண்ணாமலையார் கோயில், காணிக்கை எண்ணும் பணி (Credits - ETV Bharat Tamil Nadu)
Published : Oct 25, 2024, 5:51 PM IST
கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வர்கள் என உள்பட 120 நபர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
புரட்டாசி மாதம் பௌர்ணமி கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் உள்ள உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள உண்டியலில் 2 கோடியே 72 லட்சத்து 28 ஆயிரம் 86 ரூபாய் மற்றும் 110 கிராம் தங்கம், 1,150 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.