தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / snippets

கணினி ஆசிரியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது!

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2024, 4:46 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஒன்றின் தலைமை ஆசிரியர் அதே பள்ளியில் கணினி மேற்பார்வையாளராக (ADMINSITRACTOR CUM INSTRUCTOR ) பணிபுரிந்து வரும் பெண் ஆசிரியரிடம், நேற்று(அக்.14) மாலை பள்ளி நேரத்தில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் உடனடியாக வீட்டிற்கு சென்ற பெண் ஆசிரியர் இதுகுறித்து அவரது உறவினர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து, இன்று காலை உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை காவல் நிலைய போலீசார் மற்றும் ஜோலார்பேட்டை ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட பெண் ஆசிரியரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் பெற்றனர். அந்த புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு தலைமை ஆசிரியரை கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details