தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / snippets

வேலூர்: கொட்டும் மழையில் சிமெண்ட் கால்வாய் பணி? கடமைக்கு வேலை செய்வதாக மக்கள் குற்றச்சாட்டு

மழைக்கு நடுவே கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள்
மழைக்கு நடுவே கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2024, 9:00 PM IST

வேலூர்:வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொசப்பேட்டை பகுதியில் உள்ள 34-வது வார்டில் நைனியப்பன் தெரு, பார்த்த ஜமீதா தெரு மற்றும் மேலும் சில தெருக்களில் கால்வாய் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக ஓரிரு நாட்களுக்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று மாலை முதலே வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முதலே மிதமான மழை பெய்து வருகிறது.

இதனை சிறுதும் பொருட்படுத்தாமால் கொசப்பேட்டை பகுதியில் சிமெண்ட் கலவையைக் கொட்டப்பட்டு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், கொட்டும் மழையில் போடப்பட்ட வரும் இந்த கால்வாய் தரத்தை மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details