சென்னை : தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அதிகமான நுழைவாயில்கள் இருப்பதால் பாதுகாப்பிற்கு ஒரு அச்சுறுத்தலாக தான் உள்ளது எனவும் , குழந்தைக் கடத்தல் போன்ற சம்பவங்களை தடுப்பதற்காக நுழைவுவாயில்களை குறைக்க அறிவுறுத்தி உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஊட்டச்சத்து உறுதி செய் எனும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடக்க விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்டு பயனாளிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்,
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், "தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்கள் 76,705 பேர் கண்டறியப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகிறது-
தமிழகத்தில் மழைக்காலம் முடியும் வரை மருத்துவ முகாம்கள் நீடிக்கப்படும்.
இதையும் படிங்க : பார்வையற்றவர்களுக்கு புதிய வெளிச்சம் தரும் ஏஐ திறன் கொண்ட ஸ்மார்ட் கண் கண்ணாடிகள் அறிமுகம்!
பொதுமக்கள் யாரும் தங்களிடம் மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தருகிறேன் என்று கூறுபவர்களிடமோ, வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறுபவர்களிடமோ, மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவி செய்கிறோம் என்று கூறுபவர்களிடமோ ஏமாற வேண்டாம். இந்த அரசு முழுமையாக வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறது. வாட்ஸ் ஆப் குழு அமைத்து மனைவிக்கு கணவரே பிரசவம் பார்த்த விவகாரத்தில் மருத்துவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
குழந்தை கடத்தல் விவகாரம் குறித்து அரசு மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்கல் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 40 நுழைவாயில்கள் உள்ளது இதில் யார் வருகிறார்கள் யார் போகிறார்கள் என்று தெரியவில்லை, இதனால் தான் குழந்தை கடத்தல் போன்ற சம்பவங்கள் நிகழ்கிறது. அரசு மருத்துவமனைகளில் அதிகமான நுழைவாயில்கள் இருப்பதால் பாதுகாப்பிற்கு ஒரு அச்சுறுத்தலாக தான் உள்ளது. அரசு மருத்துவமனையில் தேவைப்படாத அளவிற்கு உள்ள நுழைவாயில்களை தடை செய்ய வேண்டும் என மருத்துவமன்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம்,"என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்