திருச்சி: மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாஜக ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் ஆகியோர் குறித்து விமர்சித்து பேசியதாக, திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சாட்டை துரைமுருகன் புகார் அளித்தார்.
பாஜக நிர்வாகி சூர்யா சிவா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!
சூர்யா சிவா வீடு (Credits - ETV Bharat Tamil Nadu)
Published : Jun 2, 2024, 6:44 PM IST
இந்த நிலையில், திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள வாசன் வேலியில் இருக்கும் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யாவின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் முகமது ஜாபர் தலைமையில், 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.