தமிழ்நாடு

tamil nadu

புனல்காடு குப்பைக்கிடங்கிற்கு எதிர்ப்பு.. கழிவுநீரோடு சேர்ந்து குடிநீர் வருவதாக பொதுமக்கள் சாலை மறியல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 14, 2024, 9:05 PM IST

Published : Aug 14, 2024, 9:05 PM IST

People
பொதுமக்கள் சாலை மறியல் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாநகராட்சியின் 39 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் புனல்காடு பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த புனல்காடு பகுதியின் இயற்கை வளங்களை அழித்து குப்பைக்கிடங்கு அமைப்பதாகவும், இதனால் ஆடையூர், புனல்காடு, தேவனந்தல், கலர்கொட்டாய் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளின் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், குப்பைக்கிடங்கு அமைத்தால் அதிலிருந்து கழிவுநீர் ஊறி மண்வளத்தை பாதிக்கும் என்றும் பலமுறை தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இருப்பினும், அதே பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் குடிநீர் கழிவுநீர் போல் வருவதாகக் கூறி, 200க்கும் மேற்பட்டோர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருவண்ணாமலை - காஞ்சி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மக்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details