ETV Bharat / bharat

எஸ்பிஐ பேரில் போலி வங்கிக் கிளை.. மோசடியாளர்கள் போலீசில் சிக்கியது எப்படி? - Fake SBI Branch

சத்தீ்ஸ்கரில் எஸ்பிஐ பேரில் போலி வங்கிக் கிளையை நடத்தி வந்தது தொடர்பாக மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

சக்தி மாவட்ட காவல் நிலையம்
சக்தி மாவட்ட காவல் நிலையம் (Credits - ETV Bharat)

சக்தி (சத்தீஸ்கர்): சத்தீஸ்கர் மாநிலம், மல்காருதா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது சப்போரா கிராமம். இங்குள்ள ஓர் வணிக வளாகத்தில் வாடகை கட்டடத்தில் எஸ்பிஐ பேரில் வங்கிக் கிளை ஒன்று கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் (செப்டம்பர் 18) செயல்பட்டு வந்துள்ளது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதத்தில் எஸ்பிஐ வங்கியின் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து வண்ணமயமான விளம்பர பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் அக்கட்டடம் முழுவதும் வியாப்பித்திருந்தது.

இந்த வங்கிக் கிளை அப்பகுதி மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த அதே வேளையில், இதன் செயல்பாடுகள் மீது பலருக்கும் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து எஸ்பிஐ வங்கியின் கோர்பா மண்டல தலைமை அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் குழு, சப்போரா கிராமத்தில் இயங்கி வந்த அலுவலகத்துக்கு சென்று நேரில் விசாரணை மேற்கொண்டது. இதில் அந்த கிளை போலியானது என்பது தெரிய வந்தது.

வங்கி நிர்வாக மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவையடுத்து, அதிகாரிகள் குழு கடந்த மாதம் 27 ஆம் தேதி சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தியதாக சக்தி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமா படேல் கூறினார். மேலும், ஐந்து பேருடன் இந்தப் போலி வங்கி கிளை இயங்கி வந்ததும் தெரிய வந்தது என்றும் காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

இதையடுத்து அந்த அலுவலகத்தில் இருந்த கணினிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், அங்கு பணிபுரிந்து வந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருதின்றனர். முதல்கட்ட விசாரணையில் பணியாளர்கள் நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: திருப்பதி லட்டு விவகாரம்: புதிய எஸ்ஐடி அமைத்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இப்போலி வங்கி கிளையில் எவ்வளவு நபர்கள் சேமிப்பு கணக்கு உள்ளிட்டவற்றை தொடங்கி உள்ளனர், அவர்கள் எவ்வளவு தொகையை டெபாசிட் செய்துள்ளனர் என்பன உள்ளிட்ட விவரங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட வருவதாக சக்தி மாவட்ட போலீசார் கூறியுள்ளனர்.

போலி வங்கி கிளையின் மேலாளர் என்று கூறி வந்தவரும், இந்த மோசடியின் மூளையாக செயல்பட்டவராக கருதப்படும் நபர் உள்ளிட்ட மூன்று பேர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.