சென்னை: இளம் இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் பல்வேறு ஆங்கில பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் உலகம் முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். அதன் ஒருபகுதியாக முதல் முறையாக வரலாறு காணாத பிரமாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் நடத்த உள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய லிடியன் நாதஸ்வரம், சென்னையில் ’சென்னை டிரம் பெஸ்ட்’ என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளோம். சென்னை காமராஜர் அரங்கில் வரும் அக்டோபர் 13ஆம் தேதி இந்த இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உலகின் முதல்நிலை டிரம்ஸ் கலைஞரான டேவ் வெக்கில் முதல் முறையாக சென்னைக்கு வருகை தந்து வாசிக்க உள்ளார்.
இவருடன் இணைந்து பல்வேறு சிறந்த டிரம்ஸ் இசை கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் வாசிக்க உள்ளனர். ரூ.500 முதல் ரூ.7000 வரை டிக்கெட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான், இளையராஜா உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல் முறை என்பதால் சிறிய அளவில் நடத்துகிறோம். அடுத்த முறை பிரமாண்டமாக நடத்த உள்ளோம். இதில் இருந்து வரும் வருமானத்தை இசை பள்ளிகளுக்கு நிதியாக வழங்க உள்ளோம். இந்த நிகழ்ச்சிக்காக நான் உள்பட அனைத்து இசை கலைஞர்களும் தீவிர பயிற்சி எடுத்து வருகிறோம்.
இதையும் படிங்க: ”சினிமாவில் திருநங்கைகள் என்றால் கேலி, கிண்டல் தான்”... திருநங்கை இயக்குநர் சம்யுக்தா விஜயன்! - Director samyuktha vijayan
தற்போது நானும், அக்காவும் இணைந்து திருக்குறளை இசை வடிவமாக மாற்றி வருகிறோம். உலகம் முழுதும் உள்ள 1000 பாடகர்கள் பாட உள்ளனர். இன்னும் சில மாதங்களில் அதன் பணிகள் முடியும். மோகன்லால் இயக்கியுள்ள ’பரோஸ்’ படத்தில் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளேன். மோகன்லால் திருக்குறள் ஆல்பத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். அவராகவே விரும்பி இதில் பாடல் பாடியுள்ளார்” என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்