நீலகிரி:ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்ட ரெட்லீப் என்ற சிவப்பு வண்ண பூக்கள் தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களிலும், மேட்டுப்பாளையம் - குன்னூர் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் பூத்துக் குலுங்குகிறது. ரெட்லீப் பூக்கள் இலையாக இருந்து பூவாக மாறும் தன்மை கொண்டது.
ஊட்டியில் பூத்துக்குலுங்கும் ரெட்லீப் மலர்கள்.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
Published : Aug 18, 2024, 8:09 PM IST
ஐந்து வண்ணங்களில் மாறும் இந்த ரெட்லீப் மலர்கள் வெள்ளை, பச்சை, இளஞ்சிவப்பு, சிவப்பு போன்ற வண்ணங்களில் மாறும் தன்மை கொண்டதாகும். நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பது போல் சாலை ஓரங்களில் பூக்கள் பூத்து உள்ளதால் மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இதனை ரசித்து செல்பியும் எடுத்துச் செல்கின்றனர்.
தூரத்திலிருந்து பார்த்தாலும் மலர்களைப் போல காட்சியளித்தாலும் உண்மையில் இது இலைகள் தான். முதலில் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த இலைகள், நாளாக நாளாக பல வண்ணங்களில் காணபடுகின்றன. ரெட்லீப் பூக்கள் கோத்தகிரியில் தேயிலைத் தோட்டங்களில் அதிகமாக நடவு செய்யப்பட்டுள்ளன.