திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பெரிய ராவுத்தர் தெருவைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (47). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். அவரது தாய் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகைபிடித்ததால் நிகழ்ந்த விபரீதம்.. வீட்டில் இருந்த பட்டாசுகள் வெடித்து ஒருவர் உயிரிழப்பு!
Published : Oct 19, 2024, 10:37 AM IST
இந்த நிலையில், நேற்று இரவு வீட்டிற்கு பட்டாசுகள் வாங்கி வந்த சாகுல் ஹமீது, வீட்டிற்குள்ளேயே புகைபிடித்துள்ளார். அப்போது நெருப்பு பற்றி வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் பயங்கரமாக வெடித்து சிதறியுள்ளன. இந்த விபத்தில் படுகாயமடைந்த சாகுல் ஹமீது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பட்டாசு சத்தத்தை கேட்டு அருகில் வசிப்பவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததன் பெயரில் வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டில் இருந்த பட்டாசுகளை அப்புறப்படுத்தினர்.
தகவல் அறிந்து வந்த வேடசந்தூர் போலீசார் சாகுல் ஹமீதின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.