தேனி:கம்பம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும், ஆன்மீக ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்துவிட்டு, சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!
Published : May 25, 2024, 1:31 PM IST
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து அதிக கனமழை பெய்து வருவதால், சுருளி அருவி நீர் பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை உள்ளிட்ட வனப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், காட்டு நீரோடைகளும் சுருளி அருவியில் கலந்து வெள்ளமாகக் கொட்டுகிறது.
இதனால் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவியில் குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர். அதுமட்டுமின்றி கனமழை பெய்து வருவதால், அருவி பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் எனவும் கம்பம் கிழக்கு வனச்சரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.