தஞ்சாவூர்: உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் நடிகை வனிதா விஜயகுமார் இன்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், “எனது குடும்பத்தின் பூர்வீகமான ஊர் தஞ்சாவூர். நான் இதுவரை தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வந்ததில்லை. எனது அப்பா ராஜராஜ சோழன் பற்றி நிறைய கதைகள் சொல்வார். ஜோவிகா தயாரிப்பில் நான் முதன் முறையாக இயக்கிய படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
விஜய் அரசியலுக்கு வந்ததற்கு வாழ்த்துகள். அரசியலில் புதிய பரிமாணம் எடுத்துள்ளார். விஜய் பெரிய வெற்றியை அடையனும். விஜயும், உதயநிதியும் சினிமாவிலிருந்து வந்தவர்கள் தான். இரண்டு பேரும் எதிரிகள் போல உள்ளனர். விஜய், உதயநிதி இருவருமே எனக்கு நண்பர்கள் தான், நல்ல தமிழகம் அமைவதற்கு யார் வந்தாலும் நான் ஆதரிப்பேன்” என்று கூறினார்.