ஐதராபாத்: நாடு முழுவதும் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கோவாவை சேர்ந்த இரண்டு வீரர்கள் ஒரே இன்னிங்சில் முச்சதம் விளாசியுள்ளனர். போர்வோரிம் மைதானத்தில் நடைபெற்ற அருணாசல பிரதேச அணிக்கு எதிரான லீக் சுற்று ஆட்டத்தில் கோவா வீரர்கள் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
கோவா அணியின் சினேகல் கவுதங்கர் (Snehal Kauthankar) மற்றும் காஷ்யப் பக்லே (Kashyap Bakle) ஆகியோர் தான் இந்த சாதனையை படைத்துள்ளனர். இதில் சினேகல் கவுதங்கர் 205 பந்துகளில் 300 ரன்களை கடந்து முதல் தர கிரிக்கெட்டில் அதிவேகமாக முச்சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அதேபோல் காஷ்யப் பக்லே 269 பந்துகளில் முச்சதத்தை கடந்தார். இரண்டு பேரும் சேர்ந்த பார்ட்னர்ஷிப் அமைத்து 606 ரன்கள் குவித்தனர். அதேநேரம் வெறும் 19 ரன்களில் உலக சாதனையை படைத்தனர். சர்வதேச அளவில் இலங்கை வீரரக்ள் குமார சங்கக்கரா மற்றும் மஹிலே ஜெயவர்தனே இணைந்து 625 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே சாதனையாக உள்ளது.
🚨 Record Alert
— BCCI Domestic (@BCCIdomestic) November 14, 2024
Goa batters Kashyap Bakle (300*) & Snehal Kauthankar (314*) have registered the highest-ever partnership in #RanjiTrophy history!
An unbeaten 606 runs for the 3rd wicket in the Plate Group match against Arunachal Pradesh 👏
Scorecard: https://t.co/7pktwKbVeW pic.twitter.com/9vk4U3Aknk
இருப்பினும் ரஞ்சிக் கோப்பையில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன் குவித்த வீரர்கள் என்ற சாதனையை இருவரும் படைத்தனர். ஆட்ட நேர முடிவில் கோவா அணி 2 விக்கெட் இழப்புக்கு 727 ரன்கள் குவித்தது. இதன் மூலம் குறைந்த விக்கெட் இழப்பில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை கோவா படைத்தது.
இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 682 ரன்கள் குவித்ததே சாதனையாக கருதப்பட்டது. தற்போது இந்த சாதனையை கோவா அணி முறியடித்துள்ளது. முதல் இன்னிங்சில் அருணாசல பிரதேசம் அணி 84 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், 643 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது.
தொடர்ந்து கோவா வீரர்களின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாத அருணாசல பிரதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 551 ரன்கள் வித்தியாசத்தில் கோவா அணி அபார வெற்றி பெற்றது. ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சிறப்பையும் கோவா கைப்பற்றியது.
முன்னரே சாதித்து காட்டிய தமிழக வீரர்கள்:
கோவா அணியில் இரண்டு வீரர்கள் ஒரே இன்னிங்சில் முச்சதம் விளாசிய நிலையில், இந்த சாதனையை இதற்கு முன்னரே தமிழக வீரர்கள் படைத்து சாதித்து காட்டி உள்ளனர். 1989 ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இதே கோவா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக வீரர்கள் டபிள்யு.வி ராமன் 313 ரன்களும், அர்ஜூன் கிர்பால் சிங் 302 ரன்களும் குவித்து சாதனை படைத்து உள்ளனர்.
இதையும் படிங்க: 2 உலக சாதனை படைத்த இந்திய அணி! ஆனாலும் பாகிஸ்தானை முந்த முடியல!