தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / snippets

மத்திய நிதி அமைச்சரின் செயல்பாட்டிற்கு 5வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் கண்டனம்!

மாமன்ற கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கவுன்சிலர்
மாமன்ற கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கவுன்சிலர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2024, 5:32 PM IST

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் இன்று (செப்.13) நடைபெற்றது. மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அன்னபூர்ணா ஹோட்டல் விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சரின் செயல்பாட்டை கண்டிப்பதாக காங்கிரஸ் கவுன்சிலர் நவீன்குமார் பேசினார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஐந்தாவது வார்டு கவுன்சிலர் நவீன்குமார் பேசும் போது, "கோவையின் அடையாளமான அன்னபூர்ணா நிறுவனத்தை கேவலப்படுத்துவது, நம் அத்தனை பேரையும் கேவலப்படுத்துவது போன்றது.

அன்னபூர்ணா உரிமையாளரை கூப்பிட்டு மன்னிப்பு கேட்க வைத்து, கூனி குறுக வைத்திருக்கின்றனர். இந்த பாசிச, அராஜக போக்கையும், மத்திய நிதி அமைச்சரின் செயல்பாட்டையும் வன்மையாக கண்டிப்பதாக" கவுன்சிலர் நவீன்குமார் பேசினார். மத்திய நிதி அமைச்சரை கண்டித்து காங்கிரஸ் கவுன்சிலர் பேசியதற்கு சக கவுன்சிலர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details