ராமநாதபுரம்: ராமேஸ்வரம் பேக்கரும்பு பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மணிமண்டபத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வந்தார். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அரசு கல்விக்கூடங்களையும், விடுதிகளையும் ஆய்வு செய்ய நிர்ணயத்ததில், 200வது தொகுதியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்வி கூடங்களையும், விடுதிகளையும் ஆய்வு செய்தார்.
200/234.. அப்துல் கலாம் நினைவிடத்தில் அன்பில் மகேஷ்!
Published : Sep 25, 2024, 10:17 AM IST
பின்பு, அப்துல் கலாம் நினைவிடத்தில் வணங்கிய அவர், இப்பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனக் கூறினார். மேலும், “இந்தியாவின் தென்கோடியில் பிறந்து, வடகோடியில் தமிழரின் பெருமையை நிலை நாட்டியவர் அப்துல் கலாம். ஏழை எளிய குடும்பத்தின் பின்னணியில் வளர்ந்து, கல்வியை மட்டுமே துணை கொண்டு இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்த விஞ்ஞானத் தமிழர். இந்தியாவின் முதல் குடிமகன் என்ற பொறுப்பு வகித்தாலும், குஅழந்தைகள் இளைஞர்களைச் சுற்றியே தனது வாழ்வை அமைத்துக்கொண்டு, அவர்களின் மனதில் இடம் பிடித்த அப்துல் கலாம் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினோம்” என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.