சென்னை: ஏ.ஆர்.ரகுமான் இசையில் ’காதலிக்க நேரமில்லை’ படத்தின் முதல் சிங்கிள் இன்று (நவ.22) வெளியாகியுள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'. ரெட் ஜெயன்ட் மூவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
வரும் டிசம்பர் 20ஆம் தேதி ’காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று இப்படத்தின் முதல் சிங்கிள் ‘என்னை இழுக்குதடி’ பாடல் வெளியாகியுள்ளது. தற்போதைய இளம் தலைமுறை காதலை பிரதிபலிக்கும் வகையில் பார்ட்டி சாங் போல இப்பாடல் உள்ளது.
மேலும் இப்பாடலை ஏ.ஆர்.ரகுமான், தீ ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வெளியான சிறிது நேரத்திலேயே மிகவும் பிரபலமடைந்துள்ளது. இப்பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். முன்னதாக இயக்குநர் கிருத்திகா உதயநிதி, ’வணக்கம் சென்னை’ மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அந்த படத்தில் மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.
இதையும் படிங்க: "கண்ணான கண்ணே நீ கலங்காதடி"... விக்னேஷ் சிவன் எழுதிய டாப் 5 மனதை வருடும் காதல் பாடல்கள்!
பின்னர் 2018இல் விஜய் ஆண்டனி நடிப்பில் ’காளி’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. பின்னர் ’பேப்பர் ராக்கெட்’ என்ற வெப் சிரியஸை இயக்கினார். இந்நிலையில் இன்று வெளியான ‘என்னை இழுக்குதடி’ பாடல் வரவேற்பை பெற்றுள்ளதால் காதலிக்க நேரமில்லை படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான 'ராயன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்