சென்னை: தனது தந்தையை பற்றி அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டாம் என ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் பதிவிட்டுள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்வதாக இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி தொடங்கி உலக மொழிகளில் பல்வேறு பாடல்களுக்கு இசையமைத்து இசை உலகில் உச்சத்தில் இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான்.
‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருது வென்றுள்ள ஏ.ஆர்.ரகுமான் செய்யாத சாதனைகளே இல்லை என கூறலாம். இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான், அவரது மனைவி சாய்ரா பானு ஆகியோருக்கு 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர். இதனைத்தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன் ஏ.ஆர்.ரகுமான், சாய்ரா பானு ஜோடி திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர்.
இந்த அறிவிப்பு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரும் 29 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் பிரிவதாக அறிவித்தனர். மேலும் இந்த சமயத்தில் தங்கள் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு பதிவிட்டிருந்தார். இதனிடையே ஏ.ஆர்.ரகுமானிடம் பணிபுரிந்த இசைக் கலைஞர் மோகினி டே தனது கணவர் மார்ஷ் ஹார்ட்சச்சும்-ஐ பிரிவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்து குறித்து தவறான கருத்துக்கள பரவியது.
இதையும் படிங்க: "என்ன ஒரு அடி அடிச்சதுக்கே 5 வருசமா கதறிகிட்டு இருக்கீங்க”... எஸ்.ஆர்.பிரபு, விஜய் ரசிகர்கள் இடையே வாக்குவாதம்!
இதனையடுத்து ஏ.ஆர்.ரகுமான் மகன் ஏ.ஆர்.அமீன் இன்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எனது தந்தை ஒரு லெஜண்ட். அவருடைய பணிக்காக லெஜண்ட் என கூறவில்லை. அவரது திரை வாழ்வில் சம்பாதித்த அன்பு, மரியாதை ஆகியவற்றால் லெஜண்ட் என சொல்கிறேன். இவ்வாறு பொய்யான செய்தி பரப்பப்படும் போது மனம் வருந்துகிறது. ஒருவரின் வாழ்க்கையை பற்றி பேசும் போது அதில் இருக்கும் உண்மையை பற்றி நாம் நினைவில் கொள்ள வேண்டும். என் தந்தையை பற்றி வலம் வரும் பொய்யான தகவல்களை தவிர்க்கவும். அவரின் கண்ணியத்தை நாம் பாதுகாக்க வேண்டும்" கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்