திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த புது ஆயக்குடியைச் சேர்ந்தவர் கருப்பாத்தாள் என்ற கற்பகம்(42). இவர் செவ்வாய்க்கிழமை வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய போது பலத்த மழை பெய்துள்ளது. இதனால், கற்பகம் அதே பகுதியில் உள்ள காமராஜர் என்பவரது வீட்டின் அருகே மழைக்கு ஒதுங்கியுள்ளார்.
பழனி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலி.. அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை..!
Published : Oct 16, 2024, 10:52 AM IST
அப்போது, எதிர்பாரா விதமாக அவர் நின்றிருந்த வீட்டின் சுவர் மழையின் காரணமாக இடிந்து அவர் மீது விழுந்துள்ளது. இந்த இடிபாட்டில் சிக்கிய கற்பகம் பலத்த காயமடைந்த நிலையில், உடனடியாக அவரை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தற்போது இந்த சம்பவம் குறித்து, ஆயக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், மழையால் வீட்டின் சுவர் இடிந்ததற்கும், உயிரிழந்த கற்பகத்திற்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.