தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / snippets

குங்குமம் அலங்காரத்தில் வாராஹி அம்மன்.. தஞ்சை பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா!

குங்குமம் அலங்காரத்தில் வாராஹி அம்மன்
குங்குமம் அலங்காரத்தில் வாராஹி அம்மன் (CREDITS- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 7, 2024, 7:40 PM IST

தஞ்சாவூர்:தஞ்சாவூர் பெரிய கோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயிலில் தனி சன்னதியில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் அருள்பாலித்து வருகிறார். இந்த அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு 21-வது ஆஷாட நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டின் தனிச் சிறப்பாக தமிழகத்திலேயே தஞ்சை பெரிய கோயிலில் வீற்றிருக்கும் மஹா வாராஹி அம்மனுக்கு மட்டும்தான் ஆஷாட நவராத்திரி விழா நடத்தப்படுகிறது. இந்த விழா ஜூலை 5ஆம் தேதி துவங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்படவுள்ளன. இந்நிலையில், மூன்றாவது நாளான இன்று ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு குங்குமம் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details