ETV Bharat / snippets

வேலூர் அரியூர் ஸ்ரீபுரம் நாராயணி தங்கக்கோயிலில் 10,008 நெய் தீபங்கள் ஏற்றி வழிபாடு!

10,008 நெய் தீபம்
10,008 நெய் தீபம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2024, 10:32 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டம், அரியூரில் உள்ள ஸ்ரீபுரம் நாராயணி தங்ககோவில் உள்ளது, இந்நிலையில், இன்று தீபாவளி திருநாளை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் மக்கள் அமைதியாகவும், நோய்நொடிகள் இன்றி நலமுடன் வாழவும், மழை வளம் பெருகி விவசாயம் செழிக்கவும் வேண்டி, நாராயணி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களைச் செய்தனர்.

இதனையடுத்து, தீபாவளி நாளில் ஸ்ரீ சக்கர வடிவில் 10,008 நெய் தீபங்களை ஏற்றிய பொதுமக்கள், தீமை அழிந்து நன்மை பெருக வேண்டுமென வழிபாடு செய்தனர். இதில் தங்கக் கோவில் நிறுவனர் சக்தியம்மா கலந்துகொண்டு, தீபாராதனைகளைச் செய்தார். ஸ்ரீ நாராயணி அம்மன் ஊஞ்சல் சேவையும், பின்னர் 10,008 தீபங்களுக்கு மகாதீபாராதனைகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.