ETV Bharat / state

“கூட்டுறவு சங்கப் பணியாளர்களை சொந்த ஊரில் பணியமர்த்த வேண்டும்”- பாமக இராமதாசு அறிவுறுத்தல்! - PMK RAMADOSS

கூட்டுறவு சங்கப் பணியாளர்களை அவர்களின் சொந்த ஊர்களில் பணியமர்த்த வேண்டும் என பாமக நிறுவன ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாமக இராமதாசு கோப்புப் படம்
பாமக இராமதாசு கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2024, 1:41 PM IST

சென்னை: கூட்டுறவு சங்கப் பணியாளர்களின் பணியிடங்கள் குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “கூட்டுறவு சங்கப் பணியாளர்களில் பெரும்பான்மையினருக்கு, சொந்த ஊரிலிருந்து மற்றும் வசிப்பிடத்திலிருந்து 100 கி.மீ தொலைவுக்கு அப்பால் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு தொற்றாநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளாக உள்ள பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் 100 கி.மீ தொலைவுக்கு சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டுறவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகவும் குறைவு என்பதால் அவர்களால் பணி செய்யும் இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்குவதும் சாத்தியமில்லை.

நியாய விலைக்கடை பணியாளர்கள், கட்டுனர்கள் உள்ளிட்ட கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படும் போது அவர்களின் வசிப்பிட தொலைவு கருத்தில் கொள்ளப்படாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும். தொலைதூரத்தில் பணியாற்றும் பணியாளர்கள் இயன்றவரை தங்களின் வசிப்பிடத்திற்கு அருகில் பணியிட மாற்றம் வழங்கும்படி மாவட்ட இணைப்பதிவாளர்களிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை.

இதையும் படிங்க: இந்திய அரசியலமைப்பு தினம்: பள்ளி, கல்லூரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பது மிகவும் எளிதானது. 2024ஆம் ஆண்டில் கூட்டுறவுப் பணியாளர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பாக, இருக்கும் காலிப் பணியிடங்களில், தொலைதூரங்களில் பணியாற்றும் பணியாளர்களை அவர்களின் விருப்பத்தை அறிந்து இட மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பின்னர், புதிய காலியிடங்களை கண்டறிந்து அவற்றுக்கு புதிய பணியாளர்களை தேர்வு செய்து நியமிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.