தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் தனி சன்னதியில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில், மஹா வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆஷாட நவராத்திரி விழா 2024; வெண்ணெய் அலங்காரத்தில் மஹா வாராஹி அம்மன்!
வெண்ணெய் அலங்காரத்தில் மஹா வாராஹி அம்மன் (Credits - ETV Bharat Tamil Nadu)
Published : Jul 12, 2024, 8:07 PM IST
அந்த வகையில், கடந்த ஜூலை 5ஆம் தேதி தொடங்கி 10நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் நடைபெறும். இந்த நிலையில், 8ஆம் நாளான இன்று ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு வெண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.