தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

“ஓடிட்டேன்ல..” - சுற்றுலா வாகனத்தை துரத்திய காட்டு யானைகள்! - mudumalai elephant chased tourists - MUDUMALAI ELEPHANT CHASED TOURISTS

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 3:40 PM IST

நீலகிரி: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் காட்டுயானைகள், புலிகள், மான்கள், கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது அங்கு கடும் வறட்சி நிலவுவதால், காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு மற்றும் குடிநீர் தேடி பிரதான சாலைகளை அடிக்கடி கடந்து செல்கின்றன. 

மாலை நேரங்களில் வனவிலங்குகளைக் காண சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் சாலைகளில் பயணிக்கின்றனர். இந்த நிலையில், மசனகுடியில் இருந்து மாயார் செல்லக்கூடிய சாலையில் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் செல்லும் பொழுது, இரண்டு காட்டு யானைகள் சாலையைக் கடக்க வந்துள்ளன. அப்போது சுற்றுலாப் பயணிகள் வாகனத்தைக் கண்ட காட்டு யானை, புழுதி பறக்க வாகனத்தை தாக்க ஓடிச் சென்றுள்ளது. 

இதனைக் கண்டு பயந்த சுற்றுலாப் பயணிகள் அச்சத்துடன் கூச்சலிட்டுள்ளனர். பின்பு, சுற்றுலாப் பயணிகள் வேகமாக வாகனத்தை இயக்கி, காட்டு யானையிடமிருந்து நூலிழையில் உயிர்தப்பினர். சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தை காட்டுயானை துரத்தும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

ABOUT THE AUTHOR

...view details