தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஆள விடுங்கடா சாமி.. நெல்லையில் சிக்கிய சிறுத்தை வனத்திற்குள் விடப்பட்டது! - Cheetah released in Nellai - CHEETAH RELEASED IN NELLAI

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2024, 3:44 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது வேம்பையாபுரம் கிராமம். இந்த கிராமத்தில் விவசாயி சங்கர் என்பவர் வளர்த்து வந்த ஆடு ஒன்றை, கடந்த மே 16ஆம் தேதி இரவு சிறுத்தை மிகக் கொடூரமாக தாக்கியது. அதேபோல், மற்றொரு நபரின் ஆட்டையும் சிறுத்தை தாக்கிய நிலையில், பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். 

இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் வந்த வனத்துறையினர், சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்தினர். பின்னர், மோப்ப நாய் அடையாளம் காட்டிய இடத்தில் சிறுத்தையைப் பிடிக்க நேற்று (மே 17) கூண்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இணை இயக்குனர் இளையராஜா தலைமையில் வனக் குழுவினர் தொடர்ந்து அங்கு முகாமிட்டு சிறுத்தையை தேடிவந்த நிலையில், இன்று (மே 18) அதிகாலை சிறுத்தைக் கூண்டில் சிக்கியது. 

அதையடுத்து, சிறுத்தையை விடுவிப்பதற்காக அதனை கூண்டோடு வாகனத்தில் ஏற்றி கோதையாறு அணை மேலுள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்துள்ளனர். இந்த நிலையில், கோதையாறு வனப்பகுதியில் சிறுத்தை விடுவிக்கப்பட்ட வீடியோவை தற்போது வனத்துறை வெளியிட்டுள்ளது. அதில் கூண்டை திறந்தவுடன் சிறுத்தை ஆளை விட்டால் போதும் என்ற மனநிலையோடு சீறிப் பாய்ந்து காட்டை நோக்கி ஓடும் காட்சி பதிவாகியுள்ளது. 

ABOUT THE AUTHOR

...view details