நீலகிரியில் ஜெயின் மக்களின் உத்தான் திருவிழா கோலாகலம்! - Nilgiris Uttam Festival - NILGIRIS UTTAM FESTIVAL
Published : Jun 9, 2024, 5:01 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஜெயின் சமூகத்தினரின் ஆடல் பாடலுடன் உத்தான் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஜெயின் சமுதாய மக்கள் அதிகளவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு, தங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
சமணத்தைப் பின்பற்றும் ஜெயின் சமுதாய மக்களிடம் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற நம்பிக்கை பொதுவாக இருந்து வருகிறது. இவர்கள் ஆண்டுதோறும் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட 400 நபர்கள் இணைந்து, 40 நாட்கள் துறவிகள் போல் விரதமிருந்து இறுதி நாளில் உத்தான் திருவிழா கொண்டாடி வருகின்றனர்.
இந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் ஊர்வலமாகச் சென்று அலங்கரிக்கப்பட்ட வாகனத்திலிருந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கி வந்தனர். மேலும், ஊர்வலத்தில் செண்டை மேளங்கள் முழங்க பெண்கள் நடனமாடி மகிழ்ந்தனர். குன்னூர் ஜெயின் மண்டபத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், மத்திய பேருந்து நிலையம் மற்றும் மவுண்ட் ரோடு வழியாக மேல் குன்னூர் சென்றடைந்தது.