ETV Bharat / state

விசைப்படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்! - FISHER STRIKE

தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் (ETV Bharat Tamulnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2025, 1:26 PM IST

தூத்துக்குடி: விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 250 விசைப்படகுகள் மூலம் கடலில் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, தூத்துக்குடி எல்லைக்குள் கேரள விசைப்படகு மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும், முன்னாள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மீனவர்களுக்காக ஒரு குழு அமைத்து அந்த குழு அறிக்கை ஒன்று சமர்ப்பித்தாகவும் அதில், தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இரவு, பகல் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம் என உள்ளதால் அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கூறுகிறது. அதனை வலியுறுத்தி தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தின் 245 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 17,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இது குறித்து, தூத்துக்குடி மாவட்ட அனைத்து விசைப்படகு தொழிலாளர்கள் சங்க தலைவர் ஜவகர் கூறுகையில், "தூத்துக்குடி எல்லைக்குள் கேரள விசைப்படகுகள் இரவு பகலாக மீன் பிடித்து வருகின்றன. அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் முன்பு ஆட்சியராக இருந்த செந்தில் ராஜ் ஒரு குழு அமைத்து அந்த குழு அறிக்கை ஒன்று சமர்ப்பித்தது. அதில் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இரவு, பகல் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம் என உள்ளது. அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் இதனால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும் கடலுக்குச் செல்லாததால் விசைப்படகு உரிமையாளர், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முடங்கியிருக்கிறது.

தமிழ்நாடு அரசு கருத்தில் கொண்டு சமூகமான பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களை கடலுக்குச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும். மேலும், 7000 தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாக 10,000 தொழிலாளர்கள் என 17,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் முடங்கி உள்ளது. மேலும், நாள்தோறும் ரூ.4 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.