ஹைதராபாத்: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் பாடகியின் பேத்தியை காதலிப்பதாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ், பல்வேறு போட்டிகளில் அபாரமாக பந்திவீசி வெற்றித் தேடி தந்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக பல்வேறு போட்டிகளில் வெற்றித் தேடித் தந்துள்ளார்.
இந்நிலையில் கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் முகமது சிராஜ் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை. இதன் காரணமாக வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் முகமது சிராஜ் பிரபல மூத்த பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தியான சனாய் போஸ்லேவை காதலிப்பதாக தகவல் வெளியானது.
சனாய் போஸ்லே Pride of bharat Chatrapathi Shivaji Maharaj என்ற படத்திலும் நடித்துள்ளார். அந்த படம் 2027ஆம் தேதி வெளியானது. ஆஷா போஸ்லே போன்று சினிமாவில் பின்னணி பாடகியாக உள்ள சனாய் போஸ்லே, சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது தனது நண்பர்கள், குடும்பத்தினருடன் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு இருந்தார்.
அதில் கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் உடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. இந்த பதிவு வெளியான பின்பு இணையதளவாசிகள் பல்வேறு வதந்திகளையும், கட்டுக்கதைகளையும் பேசத் தொடங்கிவிட்டனர். அதாவது சிராஜ் மற்றும் சனாய் போஸ்லே இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும், அவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் கதைகளை கூறத் தொடங்கினர்.
இதையும் படிங்க: 'இளவரசி' ஸ்ருதிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்; 'டிரெயின்' படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் ப்ரோமோ! - SHRUTHI HAASAN BIRTHDAY
இந்த வதந்திகளுக்கு தங்களது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். சனாய் போஸ்லே, சிராஜ் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, Mere pyaare bhai (என் அன்பு சகோதரர்) என பதிவிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த சிராஜ், சனாய் போஸ்லேவுடன் இருக்கும் படத்தை பதிவிட்டு, 'என் சகோதரி போல் யாரும் இல்லை' என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இருவரும் காதலிப்பதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.