திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ரூ.2.23 கோடி உண்டியல் காணிக்கை! - ANNAMALAIYAR TEMPLE - ANNAMALAIYAR TEMPLE
Published : May 1, 2024, 2:23 PM IST
திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பங்குனி மாதம் பௌர்ணமி முடிந்து நேற்று (செவ்வாய்கிழமை) அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணிகள் காலை முதல் நடைபெற்று வந்தது.
அண்ணாமலையார் கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வர்கள் என உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டனர். அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கத்தில் வைக்கப்பட்ட உண்டியல்கள் என அனைத்து உண்டியல்கள் எண்ணும் பணி மும்முரமாக நடைபெற்றது. அதில், சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள உண்டியலில் செலுத்த காணிக்கையாக 2 கோடியே 23 லட்சத்து 71 ஆயிரத்து 962 ரூபாய், 365 கிராம் தங்கம் மற்றும் 2838 கிலோ கிராம் வெள்ளி என பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி உள்ளனர்.