தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா! - Pookuzhi festival at Srivilliputhur - POOKUZHI FESTIVAL AT SRIVILLIPUTHUR

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 7:25 PM IST

விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோயில். இந்த கோயிலின் முக்கிய திருவிழாவாகப் பூக்குழி திருவிழாவிலிருந்து வருகிறது. சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலின் பூக்குழி திருவிழா கடந்த மார்ச்.28 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் ஆறு கால சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வந்தன. இதில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வந்தனர். 

மேலும் 13 நாட்கள் நடைபெறும் இந்த பூக்குழி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் வைபவம், 12 ம் நாளான இன்று நடைபெற்றது. இதற்காகக் கடந்த 12 நாட்களாக விரதம் இருந்து வந்த ஆண்கள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள், சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடனைச் செலுத்தினர். 

பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து, மஞ்சள் நீரை உடம்பில் ஊற்றிக் கொண்டு, நான்கு ரதவீதிகளின் வழியாகச் சுற்றி வந்து பூமிதித்து வழிபாடு நடத்தினர். இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 1200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. பக்தர்கள் பூக்குழி இறங்குவதைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிக் குண்டத்தைச் சுற்றிக் குவிந்திருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details