தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

திருவண்ணாமலை எருது விடும் விழா: சீறிப்பாய்ந்த காளைகளால் கோலாகலம்! - திருவண்ணாமலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 11, 2024, 8:28 PM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வளையாம்பட்டு ஊராட்சியில் தை திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் எருது விடும் விழா நடத்தப்பட்டு வருகிறது. மூன்றாம் ஆண்டாக நடத்தப்படும் எருது விடும் விழாவில் சுமார் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

வளையாம்பட்டு ஊராட்சியில் நடைபெற்று வரும் எருது விடும் விழாவில் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 500 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது. 100 மீட்டர் தூரம் கொண்ட இலக்கை குறைந்த வினாடியில் கடக்கும் காளைகளுக்கு முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக 40 ஆயிரம் ரூபாயும் மூன்றாம் பரிசாக 30 ஆயிரம் ரூபாயும் நான்காம் பரிசாக 20 ஆயிரம் ரூபாய் என கிடாரி கன்று உட்பட போட்டியில் வெற்றி பெரும் 51 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. 

இந்த எருது விடும் விழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தனர். எருது விடும் விழாவில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்களை எருது முட்டியதில்  காயமடைந்து அருகில் உள்ள சுகாதார மையத்தில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details