தமிழ்நாடு

tamil nadu

தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா: ஆடல் பாடலுடன் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பெண்கள்! - Thandu Mariamman Temple

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 7:57 AM IST

தண்டு மாரியம்மன் கோயில் விழா

ஈரோடு: சத்தியமங்கலத்தில் புகழ்பெற்ற தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி, கோயில் முன் மிகப் பிரம்மாண்டமாக 'கம்பம்' நடப்பட்டது. அக்கம்பத்துக்குப் பெண்கள் தினந்தோறும் புனித நீர் ஊற்றி மஞ்சள் பூசி வழிபட்டனர். கோயிலில் நாள்தோறும் சிறப்பு வழிபாடு, அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

இந்நிலையில், தண்டு மாரியம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி அம்மன் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலித்தார். அதனைத்தொடர்ந்து, நேற்று பவானி ஆற்றிலிருந்து பெண்கள் ஊர்வலமாக அம்மன் புகழ் பாடி, நடனம் ஆடி தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தீர்த்தக்குடம் ஊர்வலம் கோயிலைச் சென்றடைந்தது. அங்கு வாணவேடிக்கையுடன் கம்பத்துக்கு சிறப்புப் பூஜைகள் மற்றும் மகா அபிஷேகம் நடைபெற்றது.

இதனையடுத்து, இன்று ஏப்.23 ஆம் தேதி அம்மன் அழைப்பும், 24ஆம் தேதி காலை குண்டம் இறங்குதல், 25ஆம் தேதி பொங்கல் விழா நடைபெற உள்ளது. கொங்கு மண்டலத்தில் 12 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பெரிய கம்பத்தை இங்கு நட்டு, 18 சமுதாய இன மக்கள் ஒன்றிணைந்து விழா நடத்துவதால், 25-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details