தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

“தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி”.. முதல் திருவிருந்துக்கு 108 தட்டுகள் சீர் வரிசை.. வியந்த திண்டுக்கல்! - thaimaman seer varisai - THAIMAMAN SEER VARISAI

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 12, 2024, 4:45 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உள்ள ஏ.வெள்ளோடு கிராமத்தைச் சேர்ந்தவர் தாமஸ். இவர் ஜேசிபி இயந்திரங்களை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது உடன் பிறந்த தங்கை எஸ்தர். இவரது கணவர் டோமினிக். 

இந்த தம்பதியின் குழந்தைகள் ஜெரிக் ஆண்டோ மற்றும் ஞான ஷஸ்மிகா. இவர்களது முதல் திரு விருந்து விழா திண்டுக்கல்லில் இன்று (மே 12) நடைபெற்றது. தனது தங்கையின் குழந்தைகளுக்கு நடைபெறும் முதல் விசேஷம் என்பதால், தாய்மாமன் சீர் பெரிய அளவில் செய்ய வேண்டும் என தாமஸ் முடிவு செய்துள்ளார். 

அதன்படி, 5 சவரன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், ஜிலேபி, மைசூர்பாக், பூந்தி, லட்டு, பாதுஷா, அல்வா என 50 வகையான இனிப்பு வகைகள், பலாப்பழம், வாழைப்பழம், தர்பூசணி, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை என 50 வகையான பழ வகைகள், மளிகைச் சாமான்கள், அரிசி மூட்டைகள், முறுக்கு, மிக்சர் போன்ற கார வகைகள் என 108 சீர்வரிசை தட்டுகளை லாரி மற்றும் டிராக்டரில் வைத்து மேள தாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் ஊர்வலமாக எடுத்து வந்து சீர்வரிசை செய்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details